தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

 

எண்.100, அண்ணா சாலை, கிண்டி, சென்னை - 600 032.

முகப்பு

எம்மைப்பற்றி

அறிவிப்புகள்

சட்டவிதிகள்

செயற்பணிகள்

அதிகாரங்கள்

செய்தி   வெளியீடு

தொடர்புக்கு

இறுதி ஆணைகள் (ஆண்டுவாரியாக)


முறைமன்ற நடுவம் பற்றிய பத்திரிக்கைச் செய்திகளின் தொகுப்பு


படிவம் 1

புகைப்படத் தொகுப்பு

English Version


தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

எம்மைப்பற்றி

 

        2014ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம், சென்னை-600 032, கிண்டி, அண்ணாசாலை, 100 இலக்கமிட்ட கட்டிடத்தில் தற்போது இயங்கிவருகிறது. இச்சட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புகளில் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொதுப்பணியாளர்களால் தொடர்புடைய சட்டத்தின் வகை முறைக்கிணங்க நிர்வாக செயல்பணிகளை செய்துமுடிக்கையில் செய்யப்படும் ஊழல் அல்லது சீர்கேடான நிர்வாகம் அல்லது முறைகேடுகள் எதன் பேரிலுமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
“பொதுப் பணியாளர்” என்றால் தலைமையர் அல்லது துணைத் தலைமையர், மேயர் அல்லது துணை மேயர் உள்ளடங்களாக உள்ளாட்சி அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் பணி செய்து கொண்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கும்.