தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

 

எண்.100, அண்ணா சாலை, கிண்டி, சென்னை - 600 032.

முகப்பு

எம்மைப்பற்றி

அறிவிப்புகள்

சட்டவிதிகள்

செயற்பணிகள்

அதிகாரங்கள்

செய்தி   வெளியீடு

தொடர்புக்கு

இறுதி ஆணைகள் (ஆண்டுவாரியாக)


முறைமன்ற நடுவம் பற்றிய பத்திரிக்கைச் செய்திகளின் தொகுப்பு


படிவம் 1

புகைப்படத் தொகுப்பு

English Version


தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

செயற்பணிகள்




முறைமன்ற நடுவர் பின்வரும் செயற்பணிகள் அனைத்தையும் அல்லது எதனையும் செய்யவேண்டும், அதாவது
i) பொதுப்பணியாளர் அல்லது உள்ளாட்சி அமைப்பொன்று ஊழல் அல்லது சீர்கேடான நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளது என, அரசிடமிருந்து பெறப்பட்ட எழுத்து வடிவிலான அல்லது முறைமன்ற நடுவரிடம் கவனத்திற்கு வந்த முறையீடு எதனையும் விசாரணை செய்தல்
ii) நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், பின்வரும் முறையில் ஆணையொன்றினைப் பிறப்பித்தல், அதாவது

(a) பொதுப் பணியாளர் ஒருவரால் செய்யப்பட்டுள்ள முறைகேடு, குற்றவியல் குற்றமாக இருக்கிறவிடத்து, அந்தப் பொருட்பாடு உரிய புலனாய்வு அமைப்பிற்கு தக்க நடவடக்கைக்காக சுட்டியனுப்பப்படுதல் வேண்டும்
(b) உள்ளாட்சி அமைப்பின் நிதியத்திற்கு இழப்பினை ஏற்படுத்தியிருக்கின்ற முறைகேடாக இருக்கின்றவிடத்து, அத்தகைய முறைகேடுகளுக்கு பொறுப்பானவர்களிடமிருந்து அத்தகைய இழப்பை திரும்பப் பெறுவதற்கு ஆணையிட வேண்டும்
(c) உள்ளாட்சி அமைப்பொன்றின் அலுவலர் அல்லது பணியாளர் எவரின் கடமையும் வேண்டுமென்றே செய்த கவனமின்மையால் அல்லது மோசமாக செய்ததன் பொருட்டு முறைகேடு நடந்திருக்கின்றவிடத்து தொடர்புடைய விதிகளின்கீழ் உரிய அதிகார அமைப்பால் துறை நடவடிக்கை எடுப்பதற்காக பரிந்துரை செய்யப்பட வேண்டும்.